வங்கி ஊழியராக பயணத்தை தொடங்கி, தற்போது இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷின் திரையுலக பயணம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்….
சினிமா என்றாலே கொண்டாட்டம் தான். ஆனால் அப்படி எந்தவிதமான கொண்டாட்டமும்
இல்லாமல் 2017-ம் ஆண்டு அமைதியாக வெளியானது லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படம். அன்று லோகேஷ் கனகராஜ் தான் தமிழ் சினிமாவின் போக்கை மாற்ற போகிறார் என ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வங்கி ஊழியராக தனது பணியை தொடங்கிய லோகேஷ் கனகராஜ் இன்று இந்தியா சினிமாவே இல்லை, இல்லை, உலக சினிமாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளார். இதற்கு லோகேஷ் கனகராஜின் கடின உழைப்பும், சினிமா மீது அவர் கொண்ட அதீத காதலும் தான் காரணம்.
நல்ல படங்களை எப்போதும் மக்கள் கொண்டாட தவறியதே இல்லை என்பதை புரிந்து கொண்ட அவர் ரசிகர்களுக்காக கதைகளை உருவாக்கத் தொடங்கினார். அப்படி அவரது இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான கைதி, மாஸ்டர், விக்ரம் என பல வெற்றிப் படங்கள் லோகேஷ் கனகராஜின் சினிமா பயணத்தையே மாற்றியது.ஹாலிவுட் படங்களில் மட்டுமே பார்த்த பல்வேறு விஷயங்களை தமிழ் சினிமாவிலும் கொண்டு வந்து அதை வெற்றி பெறவும் செய்தார் லோகேஷ் கனகராஜ். புதிய தொழில் நுட்பங்களும், புதிய புதிய ஐடியாக்களும் லோகேஷ் கனகராஜிக்கு இயல்பாகவே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவரது சினிமா குரு கமல்ஹாசன் தான் என்பதையும் மறுக்க முடியாது.
தற்போது விஜய்யுடன் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைத்துள்ள லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சினிமா என்னும் கனவு கோட்டையை நாடி வரும் கலைஞர்களுக்கு உத்வேகமாக திகழும்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மேலும் பல சாதனைகள் படைக்க நாமும் வாழ்த்துவோம்.
தினேஷ் உதய், நியூஸ் 7 தமிழ்