வாட்ஸ்ஆப்பின் அசத்தலான அப்டேட்; இனி வாய்ஸ் நோட்டுகளை ஸ்டேட்டஸில் பகிர்ந்து மகிழ்லாம்

30 விநாடிகள் வரையிலான வாய்ஸ் நோட்டுகளைப் பதிவு செய்து ஸ்டேட்டஸில் பகிரும் புதிய வாய்ஸ் நோட் அப்டேட்டை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டேட்டஸ் அப்டேட் அம்சம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே பல புதிய அப்டேட்டுகளை…

30 விநாடிகள் வரையிலான வாய்ஸ் நோட்டுகளைப் பதிவு செய்து ஸ்டேட்டஸில் பகிரும் புதிய வாய்ஸ் நோட் அப்டேட்டை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்டேட்டஸ் அப்டேட் அம்சம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே பல புதிய அப்டேட்டுகளை கொண்டுவந்துள்ளது. இந்நிலையில், வாட்ஸ்ஆப் தனது புதிய வாய்ஸ் நோட் அப்டேட்டை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் 30 வினாடிகள் வரையிலான வாய்ஸ் நோட்டுகளைப் பதிவுசெய்து தங்களின் ஸ்டேட்டஸில் பகிர அனுமதிக்கிறது என வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

இந்த புதிய அப்டேட் ஜனவரி 2023 முதல் வாட்ஸ்ஆப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பீட்டா சோதனையாளர்களிடம் சோதனையிலிருந்தது.வாட்ஸ்ஆப்பின் கூற்றுப்படி, வாய்ஸ் நோட்டுகள் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. பயனர்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 7 பில்லியன் குரல் செய்திகளை அனுப்பிவருவதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது. ஸ்டேட்டஸில் தட்டச்சு செய்வதையோ அல்லது கிராபிக்ஸ் பயன்படுத்துவதையோ விரும்பாதவர்களுக்கு இந்த வாட்ஸ்ஆப் வாய்ஸ் ஸ்டேட்டஸ் மூலம் தங்கள் கருத்தை பகிர இந்த புதிய அப்டேட் வழிவகை செய்கிறது.

உங்கள் இந்த வாட்ஸ்ஆப் வாய்ஸ் ஸ்டேட்டஸை பார்க்கக்கூடிய ஒரு சிறிய குழுவைத் தேர்ந்தெடுக்கும் வசசியையும் இந்த அப்டேட் பயனர்களுக்கு எளிதாக்குகிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள ‘நெருங்கிய நண்பர்கள்’ பட்டியலைப் போல வாட்ஸ்ஆப் இப்போது ‘நெருங்கிய நண்பர்கள்’ சேர்க்கும் வசதியை கொண்டு வந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் நீங்கள் பார்ப்பது போல ஸ்டோரியை ஸ்வைப் செய்து, வாட்ஸ்ஆப் உங்களுக்கு வழங்கும் எட்டு ஈமோஜிகள் மூலம் உங்கள் எதிர்வினைகளை அனுப்பும் வசதியையும் இந்த அப்டேட் அனுமதிக்கிறது. ஃபேஸ்புக் ஸ்டோரிஸ் அம்சங்களையும் பெறுவதால், இந்த மூன்று தளத்தையும் எப்படியாவது ஒருங்கிணைத்து, ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தையும் பொதுமைப்படுத்துவதில் மெட்டா இரங்கியுள்ளது போல் தெரிகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.