பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் டிஜிட்டலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அமர்வு! நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் சிறப்புரை!

Google News Initiative & FICCI இணைந்து புனேவில் நடத்திய பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் டிஜிட்டலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அமர்வில் பங்கேற்று நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் சிறப்புரையாற்றினார்.…

Google News Initiative & FICCI இணைந்து புனேவில் நடத்திய பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் டிஜிட்டலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அமர்வில் பங்கேற்று நியூஸ் 7 தமிழ் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் சிறப்புரையாற்றினார்.

Gni நடத்திய Indian languages Program-ல் இந்தியா முழுவதிலும் இருந்து 600-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் நியூஸ் ரூம்களிலில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில் 323 செய்தி நிறுவனங்கள் முதல் கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன.

இரண்டாம் கட்ட பயிற்சி மற்றும் app உருவாக்கத்திற்கு 100 பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. 3-ஆம் கட்டத்தில் பிராந்திய மொழி செய்தி நிறுவனங்களின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்த Gni நடத்திய Indian languages Program மூலம் நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்த மூன்று கட்டங்களுக்கும் News7Tamil தேர்வானது. இதனை தொடர்ந்து , Google News Initiative & FICCI இணைந்து பிராந்திய மொழி செய்தி நிறுவனங்கள் டிஜிட்டலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அமர்வு புனேவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற News7Tamil -ன் பொறுப்பாசிரியர் சுகிதா சாரங்கராஜ் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

இதே போன்று இந்நிகழ்ச்சியில் கூகுள் இந்தியா செய்திப் பிரிவு திட்ட மேலாளரான (Program Manager,  Google News India ) ஷ்வேத்தா சூசன் இலியாஸ்,  கூகுள் இந்தியா செய்திப் பிரிவு ஒருங்கிணைப்பு மேலாளர் ( News Partner Manager,  Google News India ) அபிஷேக் மாத்தூர், மீடியாலஜி சாப்ட்வேரின் நிர்வாக மேலாண் இயக்குநர் மனிஷ் திங்கிரா ஆகியோர் தகவல் தொழில்நுட்பத்தில் பிராந்திய மொழிகளின் முக்கியத்துவம், பிராந்திய மொழி செய்தி நிறுவனங்களை அதனதன் மொழியிலயே தொழில்நுட்பத்தில் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.