மன்னார்குடியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை வாகனம்!

மன்னார்குடியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை நடைபெற்றது. இதில் பல உணவகங்கள், கடைகளில் உணவு பரிசோதனை செய்யப்பட்டது. உணவுகளின் தரம் குறித்து திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளில்…

மன்னார்குடியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை நடைபெற்றது. இதில் பல உணவகங்கள், கடைகளில் உணவு பரிசோதனை செய்யப்பட்டது.

உணவுகளின் தரம் குறித்து திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி ஆய்வு செய்து வருகின்றனர். இதில் கலப்பட உணவு, தரமற்ற உணவுகளை விநியோகிக்கும் உணவகங்கள், இனிப்பகங்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுத்து பின்னர் தொடர்ந்தால் அபராதம் விதித்து கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர். எனவே திருச்சி மண்டலத்தின் உணவு பாதுகாப்பு குறித்து அதிநவீன ஆய்வுகளை செய்யும் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், முத்துப்பேட்டை போன்ற பகுதிகளிலும், மன்னார்குடியின் திருச்சி மண்டலத்திற்காக தஞ்சைக்கு வழங்கப்பட்ட நடமாடும் உணவு பகுப்பாய்வு கூட பரிசோதனை வாகனம் மன்னார்குடிக்கு வந்தது. இது அங்குள்ள இனிப்பகம், தள்ளுவண்டி போன்ற கடைகளில் உள்ள உணவுகளை இரண்டாவது நாளாக நேற்றும் ஆய்வு செய்தது.

நிகழ்ச்சியல் மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர் ஆர்.வி.ஆனந்த், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க துணை தலைவர் சுந்தர், இணைச் செயலாளர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கர்ணன், இளநிலை பகுப்பாய்வாளர் சக்திவேல் நியமன அலுவலர் திருப்பதி பலர் பங்கேற்றனர்.

அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.