விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வட்டாராத்திற்கு ஒரு விஞ்ஞானி!

வேளாண் பயிர்களில் குறித்த ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்க வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில்…

வேளாண் பயிர்களில் குறித்த ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்க வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பனை மேம்பாடு, சிறுதானி திருவிழா, விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு, பயிர்க்கடன் திட்டம், நம்மாழ்வார் விருது உள்ளிட்ட பல அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

மேலும்,  வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி பொறுப்பு அலுவலராக நியமனம்
வேளாண் பயிர்களில், இரகங்கள்,பயிர்ப்பாதுகாப்பு முறைகள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வெளியிடப்பட்ட மகசூல்தோட்டக்கலைப் உயர் புதிதாக சாகுபடித் தொழில்நுட்பங்கள், பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான மேலாண்மை, நவீன இயந்திரங்கள், மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கான உத்திகள் போன்ற அனைத்து தகவல்களையும் விஞ்ஞான ரீதியிலான ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்குவதற்காக, வேளாண் கல்லூரிகள், வேளாண்ஆராய்ச்சி நிலையங்கள் அல்லதுவேளாண் அறிவியல் நிலையங்களிலிருந்து ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி பொறுப்பு அலுவலராக நியமிக்கப்படுவார் என்ற புதிய அறிவிப்பையும் அமைச்சர் வெளியிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.