1959ஆம் ஆண்டு அக்.21இல் லடாக் பகுதியில் சீன ராணுவத் தாக்குதலில் மத்திய படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவலர்களின் நினைவாக அக்.21 ம் தேதி வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தேசத்தின் பாதுகாப்புக்காக இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து காவல் பணியாற்றும், உண்மையான, நேர்மையான, நேசமிகு அனைத்து காவலர்களுக்கும் வீரவணக்கம்.
அவர்கள் காட்டிய தைரியம், கடமை உணர்வு என்றும் நமக்கு ஈன்றெடுக்கப்பட்ட உதாரணமாக நிலைத்திருக்கட்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







