சிறுமுகை ரேயான் நகர் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் புகுந்த அரிய வகை நாகத்தை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரேயான் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் விவசாயி. இவர் தனது குடியிருப்பு பகுதியில் குடாநீர் தேவைக்காக தொட்டி ஒன்று கட்டியுள்ளனர். அந்த தொட்டியில் தண்ணீர் எடுக்க சென்ற போது அதில் சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாம்பை பிடிக்க பழத்தேட்டம் பகுதியைச்சேர்ந்த பாம்பு பிடி வீரர் காஜாமைதீனுக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் அவர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தொட்டியில் உள்ள பாம்பினை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி லாவகமாக பிடித்தார். பின்னர் தான் அந்தப்பாம்பு மிகவும் அறியவகை பாம்பான பொறி நாகம் என தெரியவந்தது. மிகவும் கொடிய விஷம் கொண்ட இந்த நாகம் வனப்பகுதியில் மட்டுமே வாழும்.
இருப்பினும் குடியிருப்பு பகுதிக்கு வந்த பாம்பினை பத்திரமாக மீட்டு அதனை ஒரு பாட்டிலில் அடைத்து எடுத்து சென்று சிறுமுகை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வனத்துறை அறிவுறுத்தலின்படி வனப்பகுதியில் அப்பாம்பு பத்திரமாக விடப்பட்டது.
—அனகா காளமேகன்







