“பண்பாட்டின் அழகு எங்களை தனித்துவமாக்கும்!” -ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கர் புகழ் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் மஜ்ஜா எனும் புதிய இசை இணையதளத்தினை உருவாக்கியிருந்தார். இசை மற்றும் பாடலுக்காக பல்வேறு தளங்கள் இணையத்தில் இருந்தபோதிலும் புதிய தளத்தினை உருவாக்குவதற்கான தேவை குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கும்…

ஆஸ்கர் புகழ் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் மஜ்ஜா எனும் புதிய இசை இணையதளத்தினை உருவாக்கியிருந்தார். இசை மற்றும் பாடலுக்காக பல்வேறு தளங்கள் இணையத்தில் இருந்தபோதிலும் புதிய தளத்தினை உருவாக்குவதற்கான தேவை குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கும் தனியார் ஊடகத்திற்கு ரஹ்மான் பேட்டியளித்துள்ளார். அவரின் பேட்டி கீழே மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

கே: இசைக்கென புதிய இணையதளத்திற்கான தேவையை எது உணர்த்தியது?

“திறமையுள்ளவர்களுக்கான வாய்ப்பினை உருவாக்க மாற்று தளம் தேவைப்படுகிறது. போதுமான வசதிகளுடன் உள்ள ஒரு சிறந்த குழு ஒன்று நிச்சயம் சிறப்பாக மிளிரும். இவ்வாறு சிறப்பான கலைஞர்களை வெளிக்கொணர உருவாக்கப்பட்டதுதான் மஜ்ஜா எனும் இசைத்தளம். இதன் மூலம் திறமையானவர்களை கண்டுபிடித்து புதிய கலைஞர்களாக அடையாளப்படுத்துவோம் என நாங்கள் நம்புகிறோம்.”

கே: இந்த அமைப்பில் உங்கள் செயல்பாடு என்ன?

“நான் எனது அனுபவங்களிலிருந்து அவர்களுக்கு வழிகாட்ட முனைகிறேன். என்னுடைய வெற்றி, தோல்விகளிலிருந்து நான் கற்ற பாடத்தை அவர்களுக்கு கற்பிக்க நினைக்கிறேன். நாங்கள் யதார்த்தத்தில் அவர்களுக்கு உதவ நினைக்கின்றோம். இவ்வாறு இருக்கையில் என்னுடைய தனிப்பட்ட பங்களிப்பை மட்டும் நான் எப்படி வெளிகாட்ட முடியும்?”

கே:யாழ் என்கிற தமிழ் பண்பாட்டு சிறப்பு பெயரில் சர்வதேச இசை திருவிழாவை நடத்துகிறீர்கள், சர்வதேச அளவிலும் உங்களின் பண்பாட்டு சிறப்பினை வெளிப்படுத்த வேண்டிய அவசியமென்ன?

“சர்வதேச தளத்தில் நாம் பயணிப்பதைக்காட்டிலும், சொந்த பண்பாட்டு தளத்தில் சிறப்பாக பயணிப்பதே அதற்கு இணையாக இருக்கும் என பலர் குறிப்பிடுகின்றனர். மேலும், பண்பாட்டின் அழகும், அதன் நீட்சியும் வசீகரிக்கக்கூடிய ஒன்றாகும். இந்த பாணி எங்களை தனித்து அடையாளப்படுத்தும். பலர் இது குறித்து கேள்வியெழுப்ப வைக்கவும் இது உதவும்.”

கே: மாதங்கி ‘மாயா’ அருள்பிரகாசத்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து..

“எம்.ஐ.ஏ என அழைக்கப்படும் மாதங்கி ‘மாயா’ அருள்பிரகாசம் இசையின் பெரும் பகுதியை மிகச் சரியாக புரிந்து கொண்டிருக்கிறாள். அவர் ஒரு பெண்ணாக இருந்தாலும் அவரால் உலகில் ஒரு முக்கிய இசைக்கலைஞராக மாற முடிந்துள்ளது என்பது சிறந்த விசயம். அவர் இசைக்குள் மேலும் பயணித்தால் அவரால் இன்னும் சிறப்பான விடயங்களை கண்டறிய முடியும்.”

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.