இந்தோனேசியாவில் 11 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம்!

தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் சிறிய ரக விமானம் ஒன்று மாயமாகியுள்ளது.

இந்தோனேசியா நாட்டில் அமைந்துள்ள ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு நேற்று மதியம் சிறிய ரக விமானம் ஒன்று சென்றுள்ளது. அந்த விமானத்தில் 11 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளாகி 11 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.