புகைப்படக் கலைஞர் ஒருவர், தன்னுடைய திருமண நிகழ்ச்சியில், மணப்பெண்ணான தனது மனைவியை தானே புகைப்படம் எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மனிதர்களுடைய வாழ்க்கையில் திருமணம் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. நமக்கான வாழ்க்கைத் துணையை கரம்பிடிக்கும் இந்த நிகழ்வை என்றென்றும் நாம் நினைவில் வைத்துக் கொள்வதற்காக புகைப்படம் எடுத்துக் கொள்கிறோம். திருமண புகைப்படம் எடுப்பதற்கென்றே பயிற்சி பெற்ற கலைஞர்களை, இதற்காக நாம் பார்த்து, பார்த்து தேர்ந்தெடுப்பது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2023 : சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி
இந்நிலையில், புகைப்படக் கலைஞர் ஒருவர், தன்னுடைய திருமண நிகழ்வில் தானே மணப்பெண்ணை (மனைவி) விதவிதமாக புகைப்படம் எடுத்து அசத்தியுள்ளார். அயன் சென் என்னும் புகைப்படக் கலைஞர், தன்னுடைய திருமண நிகழ்ச்சியில், தனது மனைவியை கேமராவால் புகைப்படம் எடுக்கிறார். இது காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
விதவிதமாக பல்வேறு லைட்டிங் வைத்து, தனது மனைவியை அயன் சென் புகைப்படம் எடுக்கும் வீடியோவை ஸ்கைலன் போட்டோ – கிராஃபிக்ஸ் எனும் திருமண புகைப்பட ஸ்டுடியோ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 33 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த வீடியோவை காணும் நெட்டிசன்கள், புகைப்படக் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.