தூத்துக்குடியில் காருடன் ஒருவர் எரித்து கொலை – ஓட்டுநரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை…

தூத்துக்குடியில் கார் டிக்கியில் வைத்து ஒருவர் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலை கலைஞானபுரம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் TN 64 F…

தூத்துக்குடியில் கார் டிக்கியில் வைத்து ஒருவர் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு கடற்கரை சாலை கலைஞானபுரம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் TN 64 F 1584 பதிவு எண் கொண்ட மாருதி ஷிப்ட் கார் ஒன்று எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அவ்வழியாகச் சென்றவர்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினர்க்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த குளத்தூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காரில் பற்றி எரிந்து கொண்டு இருந்த தீயை அனைத்து காரை சோதனையிட்ட போது கார் டிக்கியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு தடவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டனர். கார் டிக்கியிக் வைத்து எரித்து கொலை செய்யப்பட்டவர் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகன் நாகஜோதி (48) என்பது தெரியவந்தது.இதனையடுத்து காவல்துறையினர் காரின் பதிவெண்னை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் எரிந்த கார் நாகஜோதி உடைய கார் என்பதும் அவரது ஓட்டுநர் உடன் வெளியூர் சென்றதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஓட்டுநரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். காட்டுப் பகுதியில் காரில் ஒருவர் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.