தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் வளாகத்தில் நடைபெற்ற அம்பு எய்தல் போட்டியில் 8 வயது சிறுமி 8 நிமிடத்தில் 80 அம்புகளை எய்து புதிய உலக சாதனை படைத்துள்ளாா்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மேலைகோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் வளாகத்தில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் சென்னை மேற்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த 8 வயது தான்விதா மாலினி, காற்று நிரப்பட்ட பந்தில் நின்று 8 நிமிடத்தில் 80 அம்புகளை எய்து உலக இளம் சாதனையாளர்களின் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் உலக இளம் சாதனையாளர்களின் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி தான்விகா மாலினி நாட்டுக்கு சேவை செய்ய வருங்காலத்தில் ஐபிஎஸ் ஆக போவதாக தெரிவித்தார்.







