தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிப் படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டும் தனுஷ் நடிப்பில் வெளியான இட்லி கடை, குபேரா மற்றும் தேரே இஷ்க் மே ஆகிய படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் போர்தொழில் இயக்குநர் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ’கர’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதற்கிடையில் ’அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் புது படம் ஒன்றில் நடிக்க உள்ளார். முதலில் இந்தப் படத்தைக் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென தனுஷ் – 55 திரைப்படத்திலிருந்து கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் விலகினார்.
இந்த நிலையில், இத்திரைப்படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#D55 – a grand new beginning 🌟@wunderbarfilms is happy to associate with @RTakeStudios for this massive project!
Exciting updates loading, soon!@dhanushkraja @Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishzurams pic.twitter.com/36lNwOLCbn
— Wunderbar Films (@wunderbarfilms) January 22, 2026








