மதுரை அருகே தாய் தந்தையே மகனை கொன்ற கொடூரம்

மதுரை அருகே இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பெற்ற தாய் தந்தையே மகனை கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன் – கிருஷ்ணவேணி தம்பதி. இவர்களுடைய மகன் மணிமாறன்,…

மதுரை அருகே இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பெற்ற தாய் தந்தையே மகனை கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன் – கிருஷ்ணவேணி தம்பதி. இவர்களுடைய மகன் மணிமாறன், திருமணம் முடிந்து மனைவியை பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் வைகை கரையோரம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அண்மைச் செய்தி: குடியரசு தினம்: டெல்லியில் தேசிய மாணவர் படை அணிவகுப்பு பேரணி

மணிமாறன் தினந்தோறும் மது குடித்துவிட்டு, தாய் – தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், அவரது கொடுமையை தாங்க முடியாத, முருகேசனும், கிருஷ்ணவேணியும் மணிமாறனை கட்டையால் அடித்து கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை செய்த பின்னர் அவரது உடலை துணியால் கட்டி சைக்கிளில் வைத்து எடுத்து சென்று வைகை நதி கரையில் தீயிட்டு எரித்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாய், தந்தை இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.