கொலம்பியாவில் நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கி, தொலைந்துபோன 4 பழங்குடியின குழந்தைகள் 40 நாட்களுக்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த மாதம் 4 சிறுவர்கள் உட்பட 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. அமேசான் வன பகுதிக்குள் இந்த விமானம் நொறுங்கி விழுந்ததால், அதனை கண்டறிவதில் மீட்புக் குழுவினர் சிரமப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து 40 நாட்களாக விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதன் பயனாக, விபத்தில் 4 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். விசாரணையில் அந்த 4 சிறுவர்களும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், விமானத்தில் பயணித்த விமானி, சிறுவர்களின் தாய் மற்றும் ஒரு உறவினர் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதையும் படியுங்கள் : பாராட்டு பெற போலீஸ் எஸ்ஐ நூதன முயற்சி – பலனாக பணியிடை மாற்றம் கிடைத்த சோகம்…!!
இதுகுறித்து கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடு முழுவதற்கும் மகிழ்ச்சியான செய்தி! 40 நாட்களுக்கு முன்னர் கொலம்பிய காட்டில் காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்” என பதிவிட்டுள்ளார். மீட்கப்பட்ட குழந்தைகள் ராணுவத்தினருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
40 நாட்கள் காட்டில் தனியே போராடிய சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையாகவே மிகப்பெரிய அதிசயம் என இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.