மதுராந்தகம் அருகே லாரின் உள்ளே சமைக்கும் பொழுது, மினி சிலிண்டர் வெடித்ததில் லாரியின் முன் பகுதி எரிந்து சேதம் அடைந்தது.
செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே மேட்டூரில் இருந்து சிமெண்ட் தூள்
ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த லாரியை மதுராந்தகம்
அடுத்த படாளத்தில் ஓட்டுநர் ஓய்வெடுக்க லாரியை நிறுத்தியுள்ளார். லாரி ஓட்டுநர் அலெக்சாண்டர் லாரியின் உள்ளே சமையல் செய்யும் பொழுது, சிலிண்டர் வெடித்து திடீரென தீ பிடித்ததில் லாரியின் முன் பகுதி எரிய தொடங்கியது.
லாரியின் அருகில் இருந்த மற்ற லாரி ஓட்டுநர்கள், தண்ணீரை ஊற்றி தீயினை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் அறிந்து வந்த மதுராந்தகம்
தீயணைப்பு துறையினர் முழுவதுமாக தீயை அணைத்தனர். மேலும், உரிய நேரத்தில் தீயை அணைத்ததால், பக்கத்தில் நின்று கொண்டிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட லாரி எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் தப்பியது. தகவல் அறிந்து வந்த படாளம் காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஓரம் என்பதால், இப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.
கு. பாலமுருகன்








