முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக எடுத்த முக்கிய முடிவு

இந்தி திணிப்பை எதிர்த்து பொதுக்கூட்டங்களை நடத்தத் திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவால் பரிந்துரைக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசினை வலியுறுத்தி அக்டோபர் 18 ஆம் தேதி சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்தி திணிப்பை எதிர்த்து திமுக இளைஞரணி – மாணவரணி சார்பாக அக்டோபர் 14 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், இந்தி திணிப்பை எதிர்த்து பொதுக்கூட்டங்கள் நடத்தத் திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்தித் திணிப்பை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், முதலமைச்சர் ஸ்டாலினும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆர்எஸ்எஸ்-ஐ தாலிபான்களுடன் ஒப்பிட்டு மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு பேச்சு

Web Editor

அதிமுக உள்கட்சி தேர்தல்: ஒபிஎஸ் – இபிஎஸ் வேட்புமனுக்கள் ஏற்பு

Arivazhagan Chinnasamy

நடுக்கடலில் ரூ.4 லட்சம் மதிப்பிலான வலைகளை கொள்ளையடித்துச் சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

EZHILARASAN D