இரவு நேரத்தில் கிராமத்தில் புகுந்து நாய்களை வேட்டையாடும் சிறுத்தை; அச்சத்தில் மக்கள்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2 ஆவது நாளாக இரவு நேரத்தில் கிராமத்தில் புகுந்து நாய்களை வேட்டையாட வந்த சிறுத்தையால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகளுடைய…

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 2 ஆவது நாளாக இரவு நேரத்தில் கிராமத்தில்
புகுந்து நாய்களை வேட்டையாட வந்த சிறுத்தையால் கிராம மக்கள் அச்சம்
அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக
வனவிலங்குகளுடைய நடமாட்டம் அதிகமாக உள்ளது குறிப்பாக வனப்பகுதியில் இருந்து
வெளியேறும் கரடி சிறுத்தையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் 2
நாட்களுக்கு முன்பு ஜெகதளா கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து
கிராமத்துக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று அங்கு உள்ள நாய்யை வேட்டையாடிய
காட்சி அங்க பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் இதுகுறித்து வனதுறையினரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை இந்த நிலையில் மீண்டும் 2 ஆவாது
முறையாக நாய்களை வேட்டையாட வந்த சிறுத்தையால் கிராம மக்கள் அச்சம்
அடைந்துள்ளனர். எனவே கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்பதே மக்களின்
கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.