சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில், நெல்லை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை கடந்து வெற்றியை கைப்பற்றியது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.
ஜூலை 12-ம் தேதி வரை கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும்.போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.1.7 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.30 லட்சமும் வழங்கப்படும்.
இறுதிப் போட்டி 12-ம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நெல்லை அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய நெல்லை அணி 18.5 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை கடந்து வெற்றியை கைப்பற்றியது.







