முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

செல்லப்பிராணியாக வளர்த்த முதியவரை கொன்ற கங்காரு

ஆஸ்திரேலியாவில் செல்லப்பிராணியாக வளர்த்து வந்த கங்காரு,  முதியவர் ஒருவரை தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள ரெட்மண்ட் நகரில்  77 வயதான முதியவர் ஒருவர் வசித்து வந்தார்.  நேற்று, அந்த முதியவர் பலத்த காயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார். இது குறித்து உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில், மருத்துவ குழுவினர் ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு  சென்று பார்த்துள்ளனர். ஆனால், அந்த நபரை அணுக விடாமல் கங்காரு ஒன்று தடுத்துள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்ததால், அந்த விலங்கு சுட்டுக் கொல்லப்பட்டது.  கங்காருவை அந்த நபர் செல்லபிராணியாக வளர்த்து வந்ததும், தற்போது அந்த நபர் கங்காருவால் தாக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆஸ்திரேலியாவில் சுமார் 5 கோடி கங்காரு உள்ளன. அவை 90 கிலோ வரை எடையும் 2 மீட்டர் உயரமும் வளரும். இவை ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டுள்ளன.  இதற்கு முன்னர் 1936 ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் நகரில் ஒரு பெரிய கங்காருவிடமிருந்து இரண்டு நாய்களை மீட்க முயன்ற வில்லியம் என்ற நபர் அந்த விலங்கால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். அதற்கு பின்னர் 86 ஆண்டுகள் கழித்து கங்காரு தாக்கி முதியவர் மரணமடைந்து இருப்பது அந்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா  நகரமயமாகி வருவதால், வனப்பகுதியில் அழிக்கப்பட்டு,  கங்காரு வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மகாராஷ்டிராவில் தவிக்கும் மீனவர்கள்..விடுவிக்க கோரிக்கை..

G SaravanaKumar

திமுகவின் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு கிடைக்கும்: திமுக எம்.பி கனிமொழி

Arivazhagan Chinnasamy

பள்ளி குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி- மத்திய அமைச்சர்

G SaravanaKumar