”சகல வசதிகளுடன் கூடிய வீடு….” – ட்விட்டர் பயனர் தந்த ட்விஸ்ட்!!

ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்த வீட்டின் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வாடகைக்கு வீடு தேடுவது எவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. குடும்பத்திற்கு ஏற்றவாறும், பணியிடங்கள், பள்ளிக்கூடங்கள்…

ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்த வீட்டின் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

வாடகைக்கு வீடு தேடுவது எவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. குடும்பத்திற்கு ஏற்றவாறும், பணியிடங்கள், பள்ளிக்கூடங்கள் போன்றன அருகாமையில் அமைந்திருப்பது போன்றும் உள்ள வீட்டையே நாம் அதிகம் விரும்பித் தேடுவோம். கூடுதலாக வீடும் நமக்கு பிடித்தது போல் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்போம்.

இதையும் படியுங்கள் : இன்ஸ்டாவிலும் விஜய் – அதிவேக 10 லட்சம் Followers-ஐ பெற்று உலக சாதனை!!

அந்த வகையில், சகல வசதிகளுடன் கூடிய வீட்டை கண்டுபிடித்து விட்டதாக ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டுள்ளது, பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மந்தன் குப்தா என்ற ட்விட்டர் பயனர், தனது பக்கத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய வீட்டின் புகைப்படத்தை பகிர்ந்து, பெங்களூரில் 24 மணி நேர பாதுகாப்பும், சகல வசதிகளும் கொண்ட வீட்டை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

https://twitter.com/manthanguptaa/status/1641671094418673665?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1641671094418673665%7Ctwgr%5Ea6c7588bb0c0375a7b3b5d28e5ac205a765f46ef%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fman-says-he-found-fully-furnished-home-in-bengaluru-but-there-s-a-catch-101680429255784.html

ரம்மியமான இந்த வீட்டைக் கண்டு ஆச்சரியப்பட்ட ட்விட்டர் வாசிகளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. மந்தன் குப்தா பகிர்ந்த புகைப்படம் பெங்களூரில் உள்ள வீடு அல்ல. அது ஆப்பிரிக்க சிறையில் உள்ள அறை. இதனைக் கேட்டதும் பலரால் நம்ப முடியவில்லை. மந்தன் குப்தாவின் இந்த பதிவு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. இதற்கு பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.