ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறது தமிழ்நாடு பாஜக தலைவர்கள் குழு..!

நிதியமைச்சர் பேசியதாக வெளிவந்த ஒலி நாடா தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழ்நாடு பாஜக தலைவர்கள் குழு இன்று சந்திக்க உள்ளது. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இன்று அறிக்கையில், அமைச்சர்…

நிதியமைச்சர் பேசியதாக வெளிவந்த ஒலி நாடா தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழ்நாடு பாஜக தலைவர்கள் குழு இன்று சந்திக்க உள்ளது.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இன்று அறிக்கையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளிவந்த ஒலிநாடாவின் உண்மை தன்மையை சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக்கோரி, பாஜக தலைவர்கள் குழு, ஆளுநரை இன்று சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் ஒலி நாடா பொய்யானது எனக்கூறும் அமைச்சர் பிடிஆர், தனது குரலை வைத்து, இதேபோல் ஒலி நாடாவை தயாரிக்குமாறு தெரிவித்துள்ள அண்ணாமலை, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இரு ஒலி நாடாக்களின் உண்மைத்தன்மையை நீதிமன்றம் விசாரித்து கூறட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.