நடுரோட்டில் அரசுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் பதறியடித்து ஓடினர்.
மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் நோக்கி புதுச்சேரி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே சென்றபோது மின்கசிவு ஏற்பட்டு பேருந்தின் முன் பக்கத்தில் கரும்புகை வெளியேறத் தொடங்கியது.
அடுத்த சில நொடிகளில் பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால், ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை நிறுத்தினார். அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்த படி பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். அதற்குள் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுபற்றி தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பில்லை. ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.








