கோவையில் மெத்தை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்து!

கோவையில்,  தனியாருக்கு சொந்தமான மெத்தை தயாரிக்கும் கம்பெனியில் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது ஷேக் என்பவருக்கு சொந்தமான மெத்தை…

கோவையில்,  தனியாருக்கு சொந்தமான மெத்தை தயாரிக்கும்
கம்பெனியில் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள்
எரிந்து சேதம் அடைந்தன.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது ஷேக் என்பவருக்கு சொந்தமான
மெத்தை கம்பெனி, கோவைப்புதூர் அறிவொளி நகர் பகுதியில் இயங்கி வருகிறது.
இந்நிலையில் , இன்று காலை மெத்தை கம்பெனியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்த நிலையில், இதனைப் பார்த்த பொதுமக்கள்
உடனடியாக தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

மேலும், விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை
கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான
பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

இது தொடர்பாக மதுக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர். கோடைகாலத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்கசிவால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, மின்சாதனங்களை சரி செய்யுமாறு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்தார்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.