இந்திய ரயில்வே நூலகத்தில் என்னால் வாங்க முடியாத புத்தகங்களை படிக்க முடிந்தது. அந்நூலகம் ஒரு வரபிரசாதமாக இருந்தது என ஹார்வெஸ்டிங் ஃபார்மர் நெட்வொர் நிறுவனத்தின் CEO ருசித் ஜி. கார்க்கின் ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புத்தகங்கள் ஒரு மனிதனின் சிறந்த நண்பன்’ என்ற பழமொழியை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். புத்தகம் என்பது ஒரு மனிதனின் வாழ்நாளில் மிக முக்கியமானதாகும். இளமை பருவத்தில் நூலகங்களை பயன்படுத்தி அதிகம் படிக்க வேண்டும். இளமையில் கல் என்னும் பழமொழிக்கேற்ப இளமை பருவத்தில் படிப்பது வாழ்க்கையில் பல இடங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
இந்நிலையில் ஹார்வெஸ்டிங் ஃபார்மர் நெட்வொர் (Harvesting Farmer Network) நிறுவனத்தின் சிஇஓ ருசித் ஜி. கார்க், தனது நூலக அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் என் தந்தையை இழந்தபோது, என் அம்மா இந்திய ரயில்வேயின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுக்கான நூலகத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார்.
https://twitter.com/roykajal/status/1636778223064481792
அப்போது நாங்கள் புத்தகம் வாங்கி படிக்கும் அளவிற்கு வசதியுடையவர்களாக இல்லை. ஆனால் புத்தகம் படிப்பதற்கான அனைத்து வழிகளிலும் தேடி சென்று புத்தகங்களை படிக்க தொடங்கினேன்.
அப்போது நூலகங்கள் எனக்கு ஒரு பெரிய வரமாக இருந்தது. நான் வாங்க முடியாத புத்தகங்கள், தேடிக் கிடைக்காத புத்தகங்கள், தினசரி பத்திரிக்கைகள் என அனைத்தையும் படித்தேன். ஆனால் காலப்போக்கில் 2018ம் ஆண்டில் விவசாயத்தைபற்றி பேசுவதற்காக ஹார்வேடு பல்கலைகழகத்தில் என்னை அழைத்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது அவருடைய இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.







