உங்களுக்கு இன்று ஒரு மோசமான நாளாக இருந்தால் உங்கள் உற்சாகத்தை உயர்த்த ஏதாவது தேவைப்பட்டால், இந்த செய்தி உங்களுக்கானது.
சமூக வலைத்தளங்களில், யானை குடும்பம் க்யூட்டாக தூங்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளை கேப்ரியல் கோர்னோ தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். குறுகிய மற்றும் கவர்ச்சிகரமான இந்த கிளிப்பில் யானைகள் ஒரு காட்டில் அயர்ந்து தூங்குவதைக் காணலாம்.
காணொளியில் யானைக் குடும்பம் காட்டில் எங்கோ நிம்மதியாக உறங்குவதைக் காணலாம். இந்த க்ளிப் பார்க்க மனதுக்கு இதமாக இருக்கிறது. “சீனாவில் இடம்பெயரும் காட்டு யானைக் கூட்டங்கள் அனைத்தும் ஒன்றாக உறங்குகின்றன” என்று வீடியோ தலைப்பில் கூறப்பட்டுள்ளது.
https://twitter.com/Gabriele_Corno/status/1637393219204923395?s=20
வீடியோ 386,000 பார்வைகளைப் பெற்றது. ட்விட்டர் முழுவதும் அடிக்கடி ரீட்வீட் செய்யப்பட்டது. நெட்டிசன்கள், கேப்ரியல் கார்னோவின் இடுகையின் கருத்துகள் பிரிவில், வீடியோ மிகவும் அற்புதம் என்று கூறியுள்ளனர்.







