காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனியில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவரை கோவை மாநகர சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.








