30.8 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

கல்லூரி தோழர் மறைவு வருத்தமளிக்கிறது; டி.பி.கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் உருக்கம்

மறைந்த பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்லூரி தோழர் மறைவு வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

தமிழ் திரையுலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இயக்குனர் டி.பி. கஜேந்திரன். இவர், புகழ்பெற்ற நடிகை டி. பி.முத்துலட்சுமியின் மகனாவார். விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவர் எங்க ஊரு காவல்காரன், பட்ஜெட் பத்மநாபன், மிடில்கிலாஸ் மாதவன், சீனா தானா உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். மேலும், பந்தா பரமசிவம், சந்திமுகி, வேலாயுதம், வில்லு, பேரழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

72 வயதாகும் டி பி கஜேந்திரன், இன்று காலை உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனின் மறைவிற்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், திரு. டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, சென்னை சாலிகிராமத்தில் மறைந்த இயக்குனர் கஜேந்திரன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

இயக்குனர் கஜேந்திரனும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் கல்லூரி கால நண்பர்கள். சிறுநீரக தொற்று ஏற்பட்டு இயக்குனர் கஜேந்திரன் சிகிச்சை பெற்று வந்த போது நேரடியாக சென்று முதலமைச்சர் அவரை நலம் விசாரித்தார். சுய நினைவின்றி வீட்டிலிருந்த டி.பி.கஜேந்திரனை, அவரது இல்லத்திற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் வந்து சந்தித்தபோது “உங்களை சந்தித்ததால்
இனி நூறு ஆண்டுகள் வாழ்வேன்” என்று டி.பி.கஜேந்திரன் கூறியிருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading