பாம்பு கடித்து உயிருக்கு போராடிய குழந்தை; சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்.!

வேலூர் அருகே பாம்பு கடித்த குழந்தை, சாலை வசதி இல்லாததால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்துள்ளது.  வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி – பிரியா தம்பதியின் ஒன்றரை…

வேலூர் அருகே பாம்பு கடித்த குழந்தை, சாலை வசதி இல்லாததால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்துள்ளது. 

வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை கிராமத்தை சேர்ந்த விஜி – பிரியா தம்பதியின் ஒன்றரை வயது பெண் குழந்தை தனுஷ்கா வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்தபோது, பாம்பு கடித்துள்ளது.

இதுகுறித்து அறிந்த பெற்றோர், உடனடியாக அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். சாலை வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு செல்ல நீண்ட நேரமாகியுள்ளது. இதனால் விஷம் உடல் முழுவதும் பரவி, குழந்தை வழியிலேயே உயிரிழந்துள்ளது.

இறந்த குழந்தையின் உடலை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு எடுத்து சென்ற நிலையில், சாலை வசதி இல்லாததை காரணம் காட்டி பாதி வழியிலேயே இறக்கி விடப்பட்டுள்ளனர். இதனால் 10 கிலோ மீட்டர் தூரம் அவர்கள் குழந்தையின் உடலை கையில் தூக்கி சென்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.