தேர்தல் பத்திர விவகாரம் – சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு!

தேர்தல் பத்திர திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  2018 ஆண்டு பிரதமர் நரேந்திர…

தேர்தல் பத்திர திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

2018 ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு,  தேர்தல் பத்திர திட்டத்தை கொண்டு வந்தது.  இந்த தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி,  இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. பின்னர் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட ஸ்டேட் பேங்கிற்கு உத்தரவிடப்பட்டு,  அந்த தரவுகள் தேர்தல் ஆணைய இணையப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டன.  இந்த தேர்தல் பத்திரம் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  இந்த விவகாரம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.  தேர்தல் பத்திர திட்டம் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள்,  பெரும் அரசியல் கட்சிகள் பலன் அடைந்ததாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொதுநல வழக்குகள் மையம் மற்றும் பொதுநலன் ஆகிய அமைப்புகள் சார்பில் இந்த பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.  இந்த விசாரணை உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.