மும்பையில் வீதியில் சிறுவர்களுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கிரிக்கெட் விளையாடியுள்ள வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மிகவும் ஆக்டிவாக இருப்பார். இந்திய பாடல்களுக்கு நடனமாடுவது, டப்மாஷ் செய்வது போன்ற வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். தற்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதுவரை 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. 2-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அடுத்ததாக ஒருநாள் தொடர் மார்ச் 17-ந் தேதி தொடங்குகிறது. இதில் காயம் காரணமாக விலகி இருந்த டேவிட் வார்னர் இடம் பெற்றுள்ளார். இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
அண்மைச் செய்தி : சமோசா விற்பனை மூலம் தினமும் ரூ.12 லட்சம் வருமானம் – வியக்க வைக்கும் பெங்களூரு தம்பதி
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மும்பையில் உள்ள தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுகிறார். இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 20 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.