சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரிக்குள் புகுந்த கார் – இருவர் உயிரிழப்பு!

தெலங்கானாவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரிக்கு பின்புறம் கார் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டம் அருகே உள்ள முகுந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாலையோரம்,…

தெலங்கானாவில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரிக்கு பின்புறம் கார் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டம் அருகே உள்ள முகுந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாலையோரம், ஸ்டேஷனரி பொருட்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியே வேகமாக வந்த ஒரு கார் திடீரென லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் கன்டெய்னர் லாரியின் பின்பகுதியில் முழுவதுமாக புகுந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாற்று சாதனை படைத்த யுஸ்வேந்திர சஹால்!

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் இறந்தவர்களின் பெயர், விவரங்கள் தெரியவரவில்லை. இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், “கார் ஓட்டுநர் தூங்கிவிட்டதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.

https://twitter.com/jsuryareddy/status/1782280243178619006?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1782280243178619006%7Ctwgr%5E7a1c62c127f16adc9330dc17c760680ef4d6fe17%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fkamadenu.hindutamil.in%2Fcrime-corner%2Ftwo-killed-in-road-accident-in-telangana-suryapet

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.