1 கோடியில் என் மகளின் திருமணத்தை ஏற்பாடு செய்யுங்கள் என வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு மனைவியைச் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்ட ஜவுளித் தொழிலதிபர்.
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னாவில் சஞ்சய் சேத் என்ற ஜவுளித் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். இவர் பாகேஷ்வர் தாம் பக்தர் என கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்திலிருந்து தற்கொலைக் கடிதத்தை போலீசார் கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவரது தற்கொலைக் குறிப்பில், “குருஜி, என்னை மன்னியுங்கள். எனக்கு இன்னொரு பிறவி கிடைத்தால், உங்களின் தீவிர பக்தனாக மட்டுமே இருப்பேன்” என்றார். சம்பவத்திற்கு முன் சஞ்சய் சேத் ஒரு வீடியோவை பதிவு செய்தார். அதில் “எனது குழந்தைகளுக்காகவும், என் மகளின் திருமணத்திற்காகவும் எனது பணத்தை திருப்பித் தரவும். அவளது திருமணத்தை ₹ 50 லட்சத்திலிருந்து 1 கோடியில் ஏற்பாடு செய்யுங்கள், என் மகளின் கணக்கில் பணம் உள்ளது — ₹ 29 லட்சம் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. நானும் என் மனைவியும் இருவரும் வாழ முடியாமல் போய்விட்டோம்.
நகரின் மையப்பகுதியில் உள்ள கிஷோர்கஞ்ச் பகுதியில் சஞ்சய் சேத் தனது மனைவி மீனுவுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று சஞ்சய் மற்றும் மீனு இருவரும் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள அறையிலிருந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு, மற்ற குடும்பத்தினர் மாடிக்கு வந்தனர். சஞ்சய் சேத் மனைவி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், சஞ்சய் மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்குள் அவரின் உயிரும் பிரிந்துள்ளது.
இது குறித்து பன்னா காவல் கண்காணிப்பாளர் தரம்ராஜ் மீனா கூறுகையில், “இது மிகவும் சோகமான சம்பவம், எங்கள் விசாரணை நடந்து வருகிறது. தற்போது, வெளியாட்கள் யாரும் சம்பந்தப்பட்டது போல் தெரியவில்லை, அந்த அறையில் தம்பதிகள் தனியாக இருந்தனர். நாங்கள் எல்லா கோணங்களிலும் விசாரித்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.