நாய் வளர்ப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் நாய் குட்டி என்றாலே நம்ம வீட்டில் உள்ளவர்கள் முதல் திரைப்பட கதாநாயாகிகள் வரை அனைவருக்கும் பிடித்தமானது தான். காலா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் வைகை புயல் வடிவேலு வரை அனைவரும் நமது செல்ல பிராணியான நாய்களுடன் நடித்துள்ளனர்.
தெரு நாய்களை வளர்ப்பவர்களும் உண்டு, ஆயிரத்திலிருந்து, கோடி கணக்கில் செலவு செய்து வாங்கி தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வளர்ப்பவர்களும் உள்ளனர். இந்த வரிசையில் இப்பொழுது பெங்களூருவை சேர்ந் ஒருவர் 20 கோடி மதிப்பிலான காகசியன் ஷெப்பர்ட் நாய் எனும் ஓர் அறீய வகை இன நாயை வாங்கியுள்ளார். 20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள அந்த நாயில் அப்படி என்ன உள்ளது, அதற்கு என்ன சிறப்பம்சங்கள் உள்ளன என பார்ப்போம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காகசியன் ஷெப்பர்ட் எனப்படும் இந்த இனம் தங்களையும். தங்கள் கால்நடைகளையும் பாதுகாத்துக்கொள்ள மேலை நாடுகளில் மக்கள் உபயோகிக்கும் ஓரினமாகும். இவை பெரும்பாளும் கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலுக்கு இடையே இருக்கும் காகசஸ் பகுதி என கூறப்படும் பகுதியில் வாழும் மக்கள் வளர்க்கும் செல்ல பிராணியாகும். இந்த ஆறியவகை இன நாய்கள் இந்த பகுதியில் தான் அதிக அளவிலும், நல்ல தரத்திலும் இருக்கும். பல நூற்றாண்டுகளாக காகசியன் பகுதி மக்கள் இந்த வகை நாய்களை தங்கள் மேய்ச்சலில் உள்ள விலங்குகளையும், தங்களையும் அபாயகரமான மிருகங்ளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த வகை நாய்களை உபயோகித்து வந்துள்ளனர். பல மாநிலங்களில் விரிவடைந்துள்ள இந்த இன நாய்களில் ஜார்ஜியா நகரத்தில் இருப்பவையே மிகவும் தரமானதும் தலைசிறந்ததுமாகும்.
12- ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டர் மாசோவர் எனும் ஓர் நாய் பயிர்சியாளர் இவைகளை ஒன்றிணைத்து ஒரு கூட்டத்தில் உருவாக்கி அவைகளுக்கு பயிர்சி அளித்தார். இன்றைய நாளில் உலகெங்கிளும் இருக்கும் இந்த வகை நாய்கள் பெரும்பாலும் ஒரே குணாதிசயத்தை ஒத்தது. இருப்பினும் இன்றைய நாள் வரை ஜார்ஜியா நாட்டில் இருக்கும் நாய்களே உடலலவிலும், திறமையிளும் சிறந்தவையாக விளங்குறது.
1984 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவின் கீழ் இந்த இனமானது ஃபெடரேஷன் சைனோலாஜிக் இன்டர்நேஷனல் மூலம் ஓர் இனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவை பொதுவாக 45-70 கிலோ எடையுடன் இருக்கும். இவற்றில் பெண் இனமானது 67-70 செ.மீ உயரமும், ஆண் நாய்கள் 72-75 செ.மீ உயரமும் வளரக்கூடியவை. எடை பிரிவில் பார்க்கும்பொழுது ஆண் இனமானது 68 கிலோவும், பெண் இனமானது 50 கிலோவும் எடையுடன் இருக்கும். இவை பொதுவாக 10-11 வருடங்கள் வாழக்கூடியவை. காகசியன் ஷெப்பர்ட் நாய்கள் காவலர் நாய்களாகவும், கரடி வேட்டை நாய்களாகவும் பணியாற்றின, இன்று இவை ரஷ்ய சிறைக்காவல் நாய்களாக வேலை செய்கின்றன. இந்த இனம் டென்மார்க்கில்தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் ரஷ்யாவில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
– ஆண்ட்ரு, நியூஸ் 7 தமிழ்