போதையில் நண்பனை வன்கொடுமை செய்ய முயன்ற மற்றொரு நண்பன்!

மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த நண்பரை இரும்பு ராடால் ஒருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து…

மதுபோதையில் பாலியல் தொல்லை கொடுத்த நண்பரை இரும்பு ராடால் ஒருவர் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.
குடிக்குப்பழக்கத்திற்கு அடிமையான இவர் இரவு நேரங்களில் தனது நண்பர்களை அழைத்து வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி வரை ராஜ்குமார் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ராஜ்குமாரின் தங்கை ஜெனிபர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது தலையில் பலத்த ரத்த காயங்களுடன் அவர் இறந்து கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வெளியே சென்று அருகில் உள்ளவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். பின்னர், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜ்குமாரின் நண்பர் அசாருதீன் என்பவர் அவரது வீட்டுக்கு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், ராஜ்குமாரும் அவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது ராஜ்குமார் திடீரென அசாருதீடம் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட முயற்சித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் இருந்த இரும்பு ராடால் ராஜ்குமாரை தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால், அதிகளவில் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் உயிரிழந்தார் என்பது விசாரணையின் முடிவில் தெரிய வந்தது. இதையடுத்து, அசாருதீன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.