திருவனந்தபுரம் அருகே கிணற்றில் விழுந்த கரடி!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கோழி கூண்டில் இருந்து கோழியை பிடித்து சென்று, கிணற்றில் விழுந்த கரடியை மயக்க நிலை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே வெள்ளநாடு பகுதியை…

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே கோழி கூண்டில் இருந்து கோழியை பிடித்து சென்று, கிணற்றில் விழுந்த கரடியை மயக்க நிலை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே வெள்ளநாடு பகுதியை சேர்ந்தவர் விஜயன். நள்ளிரவில் இவரது வீட்டின் கோழி கூண்டில் இருந்து கோழிகளை பிடித்து சென்ற கரடி, அருகில் இருந்த அருண் என்பவரின் கிணற்றில் விழுந்தது.

மேலும், அருண் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின், கரடியை மீட்க வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர்.

பின்னர், வலை பின்னி கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு துறை வீரர் ஒருவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும், தண்ணிர் அதிகம் இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்குள் கரடியை மீட்க முடியவில்லை. தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றும் பணி திவிரப்படுத்தப்பட்டு, ஏழு மணி நேர போராட்டத்திற்கு பின் கரடி மயக்க நிலையில் மீட்க்கப்பட்டது.பின்னர், நெடுமாங்காடு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, கூண்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

—-கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.