காரைக்கால் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கிய பள்ளி மாணவர்களை காப்பாற்றிய இளைஞரை நேரில் அழைத்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பாராட்டினார்.
காரைக்கால் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சத்தியசீலன். இவர் கடந்த மாதம் 9 ஆம் தேதி வழக்கம் போல் காரைக்கால் கடற்கரையில் மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அந்த சமயம் கடலில் குளித்து கொண்டு இருந்த கும்பகோணம் ஆடுதுறையை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் திடீரென ராட்சச அலையில் சிக்கி கொண்டனர். ஆபத்தாக மூழ்கும் நிலையில் இருந்தவர்களை இளைஞர் சத்தியசீலன் தன் உயிரை பொருட்படுத்தாமல் பத்திரமாக மீட்டர். அவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து, முதலுதவி அளித்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
இளைஞரின் இந்த துணிச்சலான செயலை அறிந்த காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், மீட்பு பணியில் ஈடுபட இளைஞர் சத்தியசீலன் நேரில் அழைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
—-ம. ஶ்ரீ மரகதம்







