#Crime | 7 அடி சுவர் தாண்டி குதித்து கைவரிசை காட்டிய 70 வயது முதியவர்! என்ன செய்தார் தெரியுமா?

பண்ருட்டி அருகே 7 அடி மதில் ஏறிகுத்து, சைக்கிள் திருடிய 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்தவர்கதிர்காமன். இவர் வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்தப்பட்ட தனது…

A 70-year-old man who jumped over a 7-foot wall and showed his hands!

பண்ருட்டி அருகே 7 அடி மதில் ஏறிகுத்து, சைக்கிள் திருடிய 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்தவர்
கதிர்காமன். இவர் வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்தப்பட்ட தனது சைக்கிளை காணவில்லை என பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரையடுத்து சைக்கிளை திருடியது யார் என்பதை அறிய, குற்றப்பிரிவு போலீசார் வீட்டின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் முதியவர் ஒருவர் வீட்டின் 7அடி மதில் சுவரை ஏறி குத்து சைக்கிளை
திருடிச் சென்றது தெரிய வந்தது‌. இதனையடுத்து யார் இந்த முதியவர் என போலீசார் விசாரித்ததில், பண்ருட்டி மந்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கலிவரதன் (70) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த சைக்கிளை பறிமுதல் செய்து கதிர்காமனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.