முக்கியச் செய்திகள்

9ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

தேர்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக
பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி
பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை
பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு
வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்ட நிலையில், கடந்த 2021-22 கல்வியாண்டிலும் 9-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட்டது, பாடத்திட்டம்
குறைக்கப்பட்டது போன்றவற்றைக் கருத்தில் கொண்டு 9-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித்
தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், தேர்வுகளில்
பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சியளிக்க வேண்டும்
என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில் நீண்ட நாட்களாக பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உக்ரைனில் அதிபர் எச்சரித்தது போன்று ரஷ்யா தாக்குதல் – 22 பேர் உயிரிழப்பு

Dinesh A

சமையல் எண்ணெய் வரி குறைப்பு!

EZHILARASAN D

ஜெயரஞ்சனுடன் எம்.பி. கனிமொழி ஆலோசனை

Gayathri Venkatesan