ஆடுதுறை மதுரகாளியம்மன் கோயிலில் 94-ஆம் ஆண்டு திருநடன உற்சவம் மங்கள வாத்தியங்களுடன் கோலாகலமாக நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஆடுதுறையில் புகழ்பெற்ற மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று முறையாகக் கொண்டு சமயாச்சாரியார்களால் பாடல் பெற்ற ஸதலங்களில் ஒன்றான புகழ்பெற்ற ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் 94- ஆம் ஆண்டு திருநடன உற்சவம் கடந்த மார்ச் 27-ம் தேதி காப்புகட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை விஷேச பூஜைகள் 30-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்களின் மங்கலவாத்தியங்களுடன் அம்பாள் திருநடன உற்சவம் தொடங்கியது.
மேலும் ஆடுதுறை பேரூராட்சி பெருந்தலைவர் ஸ்டாலின் சிறப்பு பூஜைகள் செய்தார். விழாவின் முக்கிய நிகழ்வான அம்பாள் ஊஞ்சல் உற்சவம் 14-ந் தேதியும், ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரையிலிருந்து அழகு காவடிகளுடன் 1008 பால்குடம் ஊர்வலம் 16-ம் தேதியும் நடக்க இருக்கிறது. மேலும் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
—-அனகா காளமேகன்







