பட்டுக்கோட்டை அருகே விஷ வண்டு தாக்கியதில் 9 பெண்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வெட்டிக்காடு கிராமத்தில் இன்று காலை 100 நாள் வேலைத் திட்டப் பணியில் 50 பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அருகில் இருந்த தென்னை மரத்தில் இருந்து கூட்டமாக வந்த கதண்டு வண்டுகள் எனும் விஷ வண்டுகள் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கியது. இதையடுத்து, அங்கிருந்த பெண்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து வண்டுகள் அப்பெண்களைத் தாக்கியது. இதில் 9 பெண்கள் வண்டுகள் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் வலியால் துடித்து மயக்கம் அடைந்தும், ஆபத்தான நிலையில் இருந்த பெண்களையும் மீ்ட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் 9 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-ம.பவித்ரா