நடிகர் நிதின்சத்யா கதாநாயகனாக நடிக்கும் “கொடுவா”

பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “கொடுவா” படத்தின் மூலம் நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாகக் களமிறங்குகிறார்.ராமநாதபுரத்தை மய்யமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் அப்பகுதியில் வாழும் மக்களின் எதார்த்த…

பிளேஸ் கண்ணன், ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்க துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் “கொடுவா” படத்தின் மூலம் நடிகர் நிதின்சத்யா மீண்டும் கதாநாயகனாகக் களமிறங்குகிறார்.ராமநாதபுரத்தை மய்யமாக வைத்து உருவாக்கப்படும் இப்படத்தில் அப்பகுதியில் வாழும் மக்களின் எதார்த்த வாழ்வியல் மற்றும் இறால் வளர்ப்பு பணியைச் செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே இப்படத்தின் கதை.
பேச்சலர் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பிக்பாஸ் புகழ் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கின்றார். மேலும் இவர்களுடன் ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனரதரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இன்று நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் ‘ஐங்கரன்’ கருணாமூர்த்தி, தயாரிப்பாளர் சுந்தர், இயக்குனர் ராஜேஷ் M செல்வா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.