9 மாத குழந்தையின் தாய் மர்ம மரணம் – கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை!!

கள்ளக்குறிச்சி அருகே திருமணமான 2 ஆண்டுகளுக்குள்  9 மாத கைக் குழந்தையை விட்டு விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்கு…

கள்ளக்குறிச்சி அருகே திருமணமான 2 ஆண்டுகளுக்குள்  9 மாத கைக் குழந்தையை விட்டு விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரிய
சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது30). இவரது மனைவி
மகாலட்சுமி (வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
முனிஸ்ரீ ‌ என்ற 9-மாத குழந்தை உள்ளது.

திருநாவுக்கரசு சென்னையில் உள்ள தனியார் கொரியர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். மகாலட்சுமி மாமனார் மாமியாருடன் வசித்து வந்தார். நள்ளிரவு மாமனார் மாமியார் வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த நிலையில்  நீண்ட நேரமாக குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டு மாமியார் மலர்கொடி உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்பொழுது தனது மருமகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கூச்சல் இட்டார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சின்னசேலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீசார் இறந்து போன
மகாலட்சுமியின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளிலே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கள்ளக்குறிச்சி டிஎஸ்பி விசாரணை நடத்தி  ஆர் டி ஓ விசாரணைக்கு உத்தரவிட்டார். ம்காலட்சுமி உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டாரா அல்லது குடும்ப பிரச்சனையா வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.