நாகை மீனவர்கள் 9 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 9 மீனவர்கள் கடந்த 20ம் தேதி நள்ளிரவு நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீனவர்கள் இன்று காலை மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது முல்லைத்தீவுபகுதியில் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி துப்பாக்கி முனையில் மீனவர்களை கைது செய்துள்ளனர். படகில் இருந்த அக்கரைப்பேட்டை கலையரசன், சஞ்சிகண்ணு, ஆனந்த், கமலநாதன், ராஜா, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரை சேர்ந்த ரீகன், பிரவீன் ஆகாஷ் உள்ளிட்ட 9மீனவர்களை கைது செய்து, அவர்களது விசைப்படகையும், படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்புடித்தாக திருகோணமலை சிறையில் அடைத்தனர். மீனவர்களின் வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பயாஸ், மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமான மூலம் தாயகம் திரும்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.








