9 மாநில தேர்தல்களே இலக்கு – பாஜக தலைவர் ஜேபி.நட்டா கட்சியினருக்கு அறிவுறுத்தல்

2023-ம் ஆண்டு மிக முக்கியமானது. இந்த ஆண்டு கடுமையாக உழைத்து 9 மாநில தேர்தல்களில்  வெற்றி பெற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். பாஜக தேசிய செயற்குழு…

2023-ம் ஆண்டு மிக முக்கியமானது. இந்த ஆண்டு கடுமையாக உழைத்து 9 மாநில தேர்தல்களில்  வெற்றி பெற வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தையொட்டி டெல்லியில் பிரம்மாண்ட சாலை பேரணியை பாஜக நடத்தியது. குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு பிரம்மாண்ட வெற்றி பெற்ற தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

முதல் நாள் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே,பி.நட்டா பேசிய உரை குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, 2023ம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டு. 9 மாநில தேர்தல்கள் இந்த ஆண்டு நடக்க இருக்கிறது. இந்த 9 மாநில தேர்தல்கள் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முன்னோட்டம் . இந்த 9 மாநில தேர்தலிகள் கடுமையாக உழைத்து வெற்றி பெற வேண்டும் என்று நட்டா வலியுறுத்தினார்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய ரவி சங்கர் பிரசாத், பின்னடைவாக உள்ள வாக்குச் சாவடிகளை வலிமைபடுத்த வேண்டும். 72000 வாக்குச் சாவடிகள் என முன்னர் கண்டறியப்பட்டது. தற்போது.130 லட்சம் வாக்குச்சாவடிகளை வலிமைபடுத்த வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறினார். 9 மாநிலங்களில் ஏற்கெனவே 5 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்த 9 மாநிலங்களுடன் 10வதாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடைபெறலாம் என்று நட்டா கூறியதாக ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.