ரூ.83 கோடி அபராதம்! ஜெட் விமானத்தை விற்பனை செய்யும் டொனால்டு ட்ரம்ப்!

சட்டவிரோத மோசடியில் ஈடுபட்டதாக டொனால்டு ட்ரம்ப்  மீது ரூ.83 கோடி அபராதம் வழங்கப்பட்ட நிலையில்,  தனக்கு பிடித்தமான ஜெட் விமானத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் ஜோ பைடன் தற்போது அதிபராக உள்ளார். …

சட்டவிரோத மோசடியில் ஈடுபட்டதாக டொனால்டு ட்ரம்ப்  மீது ரூ.83 கோடி அபராதம் வழங்கப்பட்ட நிலையில்,  தனக்கு பிடித்தமான ஜெட் விமானத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் ஜோ பைடன் தற்போது அதிபராக உள்ளார்.  இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால்,  வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அந்த வகையில்,  குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே, ஆகியோர் களத்தில் உள்ளனர்.  இந்நிலையில், அமெரிக்காவில் தேர்தல் களம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், சட்ட விரோத மோசடியில் ஈடுபட்டதாக டொனால்டு ட்ரம்ப் மீது நியூயார்க் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.  இதையடுத்து, டொனால்டு ட்ரம்ப் மீது 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 831,547,000) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  இந்த அபராத தொகையை செலுத்துவதற்காக தனக்கு மிகவும் பிடித்தமான ஜெட் விமானத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். அந்த ஜெட் விமானத்தை டொனால்டு ட்ரம்ப் ஈரானிய – அமெரிக்க கட்டுமான மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவரான மெஹர்தாத் மொயதியிடம் விற்பனை செய்ய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும்  படியுங்கள் : ராஃபா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்… 45 பேர் பலி – உலக நாடுகள் கண்டனம்!

1997ம் ஆண்டு ஈவோஜெட்ஸால் நிறுவனத்திடமிருந்து டொனால்டு ட்ரம்ப் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 83,14,64,000)  அந்த ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார். மெஹர்தாத் மொயதி என்பவர் 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்டு ட்ரம்ப் பிரசாரத்திற்காக 2,45,000 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.