பதிவுத் துறையில் தவறு செய்தவர்கள் 80 பேர் தற்காலிக பணிநீக்கம்-அமைச்சர் மூர்த்தி

பதிவுத் துறையில் தவறு செய்தவர்கள் 80 பேர் வரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என திருவல்லிக்கேணி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக வணிக வரி மற்றும் பத்திர பதிவுத் துறை…

பதிவுத் துறையில் தவறு செய்தவர்கள் 80 பேர் வரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என திருவல்லிக்கேணி சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக வணிக வரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை இராயப்பேட்டை பதிவுத் துறை ஒருங்கிணைந்த வளாகத்தில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, பதிவுத் துறை தலைவர் சிவனருளுடன் திருவல்லிக்கேணி சார் பதிவாளர் அலுவலகத்தில், ஆய்வு மேற்கொண்ட அவர், சார் பதிவாளர் அனுவிடம் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினார்.

பத்திரப் பதிவு செய்ய வந்தவரிடம் 15 நிமிடங்களுக்குள் பத்திரப் பதிவு நடைபெற்றதா என கேட்டறிந்தார் மூர்த்தி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:
சார் பதிவாளர் அலுவலகங்கள் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்தேன். மக்களுக்கு வசதியாக எளிமையாக சட்டத் திருத்த முன் வடிவை கொண்டு வந்து, வரும் 28 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தியாவிலேயே முன் மாதிரியாக சட்டம். போலியாக பதிவு செய்தால், ரத்து செய்யும் வகையில் சட்டம். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சிறை தண்டனை.

இதையும் படியுங்கள்: ஒவ்வொரு துறை செயலாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய நிலை ஏற்படும் – நீதிபதிகள் காட்டம்

தவறாக பதிந்துவிட்டால் நீதிமன்றத்திற்கு சென்று நீதிபெற வேண்டிய கட்டாயம் இருந்தது. உயரதிகாரிகளிடமே தீர்வு காணும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. தவறு செய்தவர்கள் 80 பேர் வரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைத்தரகர்கள் இல்லாமல் பதிவு செய்ய வேண்டும். தவறான செய்தியை பரப்புவதை தவிர்த்துவிட்டு, உண்மை செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. வக்பு வாரியம், கோயில் நிலங்கள் பதிவு செய்யப்படாது என்றார் மூர்த்தி.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.