இன்றைய இளைஞர்கள் சாதாரண எடையை தூக்க கூட கஷ்டப்படும் நிலையில் 80 கிலோ எடையை சாதரணமாக தூக்கி அசத்தியுள்ளார். 7வயது பளு தூக்கும் வீராங்கனணை.
கனடா நாட்டின் ஒட்டாவா பகுதியை சேர்ந்தவர் சிறுமி ரோரி வான் உல்ஃப்ட் ( Rory van Ulft ). 7வயதே ஆகும் இச்சிறுமி அமெரிக்காவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் கலந்துக்கொண்டார். அதில் 11 மற்றும் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்ட இவர் அசாத்திய சாதனையை புரிந்துள்ளார். இவர் டெட் லிப்டிங் முறையில் 80 கிலோ, ஸ்னாட்ச் முறையில் 32 கிலோ, க்ளீன் & ஜெர்க் முறையில் 43கிலோ, ஸ்குவாட் முறையில் 61கிலோ என பளுதூக்கி அனைவரையும் அசத்தியுள்ளார்.
வெறும் 4 அடி உயரமே உள்ள ரோரி தனது 5 வயது முதல் ஜிம்னாஸ்டிக் மற்றும் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக வாரத்தில் 13 மணிநேரத்தை ஒதுக்கி வருகிறார்.
இது குறித்து பேசிய அவர், “நான் மேலும் மேலும் பலமடைய விரும்புகிறேன், பின்னர் என்ன நடக்கும் என்பது குறித்து எனக்கு கவலை இல்லை, நான் எனக்கு பிடித்ததை செய்கிறேன்” என தெரிவித்தார்.







