பிராட் பிட் – ஏஞ்சலினா ஜோலியின் விவாகரத்து வழக்கு… 8 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த முடிவு!

பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலியின் விவாகரத்து வழக்கு சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகை தான் ஏஞ்சலினா ஜோலி. இவருக்கு உலகம் முழுவதும் பல கோடி…

பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலியின் விவாகரத்து வழக்கு சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகை தான் ஏஞ்சலினா ஜோலி. இவருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014 ஆம் ஆண்டு பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். மேலும் போரில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

இதற்கிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட்டுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பிராட் பிட் தனியார் ஜெட் விமானத்தில் தன்னிடமும் தனது குழந்தைகளிடமும் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விவாகரத்து வழக்கு அவர்களது குழந்தைகள் பாதுகாப்பு கொண்டு எட்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இருவரும் அதிகாரபூர்வமாக விவாகரத்து பெற்று கொண்டதாக ஏஞ்சலினா ஜோலியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏஞ்சலினா ஜோலி பிராட் பிட்டிடம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அவரும் அவரது குழந்தைகளும் பிராட் பிட்டுடன் பகிர்ந்து கொண்ட அனைத்து சொத்துகளையும் விட்டுவிட்டார்கள். அப்போதில் இருந்து ஏஞ்சலினா அமைதியை நோக்கி பயணித்தார். இப்போது அவர் நிம்மதியாக இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.