8 மாத கர்ப்பிணியான சீரியல் நடிகை மாரடைப்பால் மரணம்…

8 மாத கர்ப்பிணியான மலையாள சின்னத்திரை நடிகை பிரியா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அவருக்கு வயது 35.  நடிகை பிரியா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.  அவருக்கு வழக்கமான பரிசோதனைக்காக…

8 மாத கர்ப்பிணியான மலையாள சின்னத்திரை நடிகை பிரியா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அவருக்கு வயது 35.  நடிகை பிரியா தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.  அவருக்கு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அவரது மரணச் செய்தியை நடிகர் கிஷோர் சத்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  பிரியாவின் பிறந்த குழந்தை ஐசியூவில் இருப்பதாகவும் கிஷோர் சத்யா குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து இடைவெளி எடுத்து கொண்ட பிரியா, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.  அவருக்கு சக நடிகை, நடிகர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.